Friday, April 8, 2011

வீ.கே.புதூர் பகுதியில் இந்திய கம்யூ.,ஆர்ப்பாட்டம்


வீரகேரளம்புதூர்:வீ.கே.புதூர் பகுதியில் விளைநிலங்களில் காற்றாடி ஆலை நிறுவுவதை கண்டித்து இந்திய கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வீ.கே.புதூரை சுற்றியுள்ள வீராணம், அதிசயபுரம், ராஜகோபாலப்பேரி, கருவந்தா, லெட்சுமிபுரம், பரங்குன்றாபுரம், அச்சங்குன்றம், கலிங்கப்பட்டி, ராமனூர், ராஜபாண்டி, கழுநீர்குளம், முத்துகிருஷ்ணபேரி, துத்திகுளம் போன்ற பகுதிகளில் காற்றாடி மின் ஆலைகள் நிறுவப்பட்டு செயல்படுகின்றன.

தொடர்ந்து மின் ஆலைகளை நிறுவ பல்வேறு நிறுவனங்கள் படையெடுத்து வருவதால் இப்பகுதியில் நிலங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.இதனால் குளங்களுக்கு மிக அருகிலும், பாசன பரப்புகளில் உள்ள நன்செய் நிலங்களும் கூட காற்றாடி ஆலைக்காக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வெகுவிரைவில் உணவு தானியங்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே விளைநில பகுதியில் காற்றாடி ஆலைகள் நிறுவுவதை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் வீ.கே.புதூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூ., கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., ராமசாமி தலைமை வகித்தார். சிவகாமி தொகுதி முன்னாள் எம்.பி.,அழகர்சாமி, நெல்லை மாவட்ட செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டகுழு உறுப்பினர் அருணாசலம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.தென்காசி தாலுகா செயலாளர் போஸ், துணை செயலாளர் கணேசன், குழு உறுப்பினர் மாடசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி, சிவகிரி தாலுகா செயலாளர் வேல்சாமி, செங்கோட்டை தாலுகா செயலாளர் அரிகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வீ.கே.புதூர் தாலுகா துணை செயலாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment